ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ் ஆப் கால் ரெக்கார்ட் செய்வது எப்படி?
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (18:41 IST)
நார்மல் போன் கால்களை ரெக்கார்ட் செய்வது போல வாட்ஸ் ஆப் கால்களை ரெக்கார்ட் செய்ய முடியுமாம். இந்த வாட்ஸ் ஆப் காலக்ளை எப்படி ரெக்கார்ட் செய்ய முடியும் என பார்ப்போம்...
சாதாரண போன் கால்களைவிட வாட்ச் ஆப் போன் கால்கள் பாதுகாப்பானது என்பதால் பலர் அதை இப்போது அதிகமக பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இதுவும் ஆபத்தானவையே.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஆனால், இந்த வழிமுறைகளை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் செயல்படுத்த முடியாது.
மேலும், இம்மாதிரி கால்களை ரெக்கார்ட் செய்வது அதிகாரப்பூர்வ மற்றது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். முதலில் ப்ளே ஸ்டோர் சென்று க்யூப் கால் ரெக்காட்டிங் என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
இந்த ஆப் உங்கள் மாடல் ஸ்மார்ட்போனில் செயல்படும் பட்சத்தில் அதை இன்ஸ்டால் செய்யவும். இன்ஸ்டால் பிராசஸ் முடிந்த பின்னர் ஆப்பை ஓபன் செய்து வாட்ஸ் ஆப் அக்கொண்ட்டிற்குள் நுழையவும்.
பின்னர், உங்கள் காண்டாக்டில் இருக்கும் ஒருவருக்கு கால் செய்யும் போது இந்த க்யூப் கால் ரெக்காட்டிங் செயல்பட துவங்கினால் உங்கல் கால் ரெக்கார்ட் செய்யப்படுகிரது என அர்த்தம்.
அப்படி செயல்படவில்லை எனைல், க்யூப் கால் ரெக்கார்டர் செயலின் செட்டிங்-ல், போர்ஸ் வாய்ப் கால் ஏஸ் வாய்ஸ் கால் என்பதை தேர்வு செய்யவும்.
இப்போது மீண்டும் வாட்ஸ் ஆப் கால் மேற்கொள்ளும் போது க்யூப் கால் விட்ஜெட் இயங்குவதை காணமுடியும். அப்படியும் அந்த ஆப் இயங்கவில்லை என்றால் உங்கல் மாடல் ஸ்மார்ட்போனில் கால் ரெக்கார்ட் செய்ய முடியாது.