அதன் பின்னர் ஆட்சியமைத்த நவாஷ் ஷெரிப் 2013ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக முஷாரப் மீது தேசதுரோக வழக்கைப் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து முஷாரப் தப்பித்து துபாயில் தஞ்சமடைந்தார். இதுசம்மந்தமான வழக்கு பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளிதான் என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. முஷாரப் இப்போது உடல்நல பாதிப்பால் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முஷாரப்பின் தண்டனைக்கு பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இப்போது துபாயில் இருக்கும் முஷாரப் வீடியோ மூலம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நானோ எனது வழக்கறிஞரோ வாதிட அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு சந்தேகத்திற்குரியது என முழுமையாக நான் நம்புகிறேன். எனக்கு எதிரான ஒருசிலரின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ’ எனத் தெரிவித்துள்ளார்.