பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்து இராணுவ புரட்சி மூலம் அதிபராக பதவியேற்று கொண்டவர் பர்வேஸ் முஷரஃப். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திய அதிகாரிகளில் ஒருவராக முஷரஃப் இருந்துள்ளார். 1999ம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் பாகிஸ்தான் பிரதமரையே வீட்டு சிறையில் வைத்தார். 2001ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷரப் 2007ம் ஆண்டில் பாகிஸ்தான் சட்ட அமைப்பை முடக்கி அவசர நிலையை பிரகடன படுத்தினார்.
முஷரஃப் காலத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை வளர்த்து விட்டார். அவரது காலத்தில்தான் இந்தியா மற்றும் அண்டை நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடைபெற்றது என்ற குற்றசாட்டு உள்ளது. அதன் பிறகு பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பிய பிறகு 2013ம் ஆண்டு முஷரஃப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் முஷர்ஃப் தப்பி வெளிநாட்டுக்கு சென்றார்.