வீடியோ கேம் விளையாட்டில் 16 வயது சிறுவனுக்கு பல கோடி பரிசு !

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (18:56 IST)
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் வசிப்பவர் கியர்ஸ்ட்ரோ (16). இவர் அமெரிக்காவில் நடைபெற்ற போர்நைட் ஆன்லைன் வீடியோ கேம் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசாக, 3 மில்லியன் அமெரிக்கன் டாலர் (நம் இந்திய மதிப்பில்  ரு. 28 கோடியே 68 லட்சம் )பெற்றுள்ளார். 
இப்போட்டியின் தொடக்கம் முதலே கியர்ஸ்ட்ரோ மிகவும் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். உலக அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு சுற்றுகள் முடிவில் 59 புள்ளிகளை பெற்று கியர்ஸ்ட்ரோ பிடித்தார்.
 
எனவே  இப்போட்டியில் முதல் இடம் பிடிக்கும் நபருக்கு நம் இந்திய மதிப்பில் ரு. 28 கோடியே 68 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. 
 
உலக அளவில் ,எந்த ஒரு ஆன்லைன் போட்டிக்கும்,இதுவரை, இத்தனை பரிசுத்தொகை வழங்கப்பட்டதில்லை. அதனால் இப்போட்டியில் பரிசுத்தொகை வென்ற கியர்ஸ்ரோ உலக அளவில் அறியப்பட்டுள்ளார்.மேலும் இப்போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த சீன வீரருக்கு 1.8 மில்லியன் (ரு. 12 கோடியும்). இப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ரு. 50 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்