கொரோனா தொற்றைக் குறைக்கும் மவுத் வாஷ்கள்- ஆய்வில் தகவல்!

புதன், 21 அக்டோபர் 2020 (16:26 IST)
கொரோனா தொற்று பரவுவதை மவுத் வாஷ்கள் வெகுவாக குறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அச்சம் இன்று வரை மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளும் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மவுத்வாஷ்கள் பயன்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் கொல்லப்படுவதாகவும் இதனால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மவுத் வாஷ் பயன்படுத்த சொல்லி பரிந்துரைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்