கணவரை விவாகரத்து செய்த மனைவி – குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:35 IST)
அமெரிக்காவில் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து அவரை விவாகரத்து செய்த மனைவி குழந்தைகளை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணதில் வசித்து வருபவர் ஆஷ்லே. இவரது முன்னாள் கணவர் மெர்வின். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில்  இருவருக்கும் கருத்து மாறுபாடுகள் எழ தனது கணவர் மெர்வினிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார் ஆஷ்லே.

மெர்வின் தனது விவாகரத்து நிபந்தனைகளாக குழந்தைகள் தன்னிடமே இருக்க வேண்டும் என்றும் ஆஷ்லே தனது அபார்ட்மெண்ட்டிலேயே தங்க வேண்டுமென்றால் அதற்காக வாடகை தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆஷ்லே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற அவர், தனது மூன்று குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூன்று குழந்தைகளின் இறப்பு அந்தப் பகுதியில் சோக அலைகளை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்