உலகம் முழுவதும் வைரலாகும் மோமோ சேலஞ்ச்: மீண்டும் ஒரு புளூவேல்?

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (05:59 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் இளளஞர்கள் மத்தியில் பரவிய ஒரு ஆபத்தான விளையாட்டு புளூவேல் என்பது தெரிந்ததே. இந்த விளையாட்டில் தமிழகத்தில் கூட ஒருசில தற்கொலை மரணங்கள் ஏற்பட்டது. தற்போது இந்த விளையாட்டு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மோமோ சேலஞ்ச் என்ற ஆபத்தான தற்கொலை விளையாட்டு ஒன்று உலகின் முன்னணி நாடுகளில் வைரலாகியுள்ளது
 
மோமோ விளையாட்டு என்பது ஆன்லைனில் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். அதன்பின்னர் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும். இந்த விளையாட்டில் நுழைந்த யாரும் வெளியே வரமுடியாது. அப்படி வெளியேற முயற்சித்தால் அவர்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் அவர்களுடைய மொபைலுக்கு மெசேஜ் வரும். அதுமட்டுமின்றி இந்த விளையாட்டில் உள்ளே நுழையும்போது பதிவு செய்யப்பட்ட விளையாடுபவர்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் பயமுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 
இவ்வாறு வந்த மிரட்டல் காரணமாக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் இதுகுறித்து அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இந்த சேலஞ்ச் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதாகவும், இந்த விளையாட்டை உடனடியாக முடக்கி இளைஞர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்