ஓம் பூரியை கொலை செய்தது பிரதமர் மோடியாம்: பாகிஸ்தான் தொலைக்காட்சி பரபரப்பு குற்றச்சாட்டு- வீடியோ

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (16:14 IST)
கடந்த சில தினக்களுக்கு முன் மாரடைப்பால மரணம் அடைந்த நடிகர் ஓம் பூரியை பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவல் இணைந்து கொலை செய்ததாக பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியுள்ளது.



 

1950ம் ஆண்டு ஹரியான மாநிலத்தில் பிறந்த இவர் பல இந்தி, மராட்டி, கனனடம், தெலுங்கு, பஞ்சாபி மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் கமலுடன் ஹேராம் படத்தில் இவர் நடித்துள்ளார். 1982ம் ஆண்டு வெளியான ஆரோஹன், 1984ம் ஆண்டு வெளியான அர்த் சத்யா ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு தேசிய விருது தரப்பட்டது. மேலும், 1990ம், ஆண்டில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. கடந்த வெள்ளிகிழமை அன்று காலை  திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இழந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று ஓம் பூரி மரணம் தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டது. அதில், மறைந்த ஓம் பூரி பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வந்தார். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு இவரது கருத்தால் அச்சுறுத்தல் இருந்தது. எனவே இவரை பிரதமர் மோடியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் இணைந்து கொலை செய்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது தலையில் காயம் இருந்ததாகவும், அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை தங்களிடம் இருப்பதாகவும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்