தற்கொலை செய்த மாணவி லாவண்யா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: அண்ணாமலை வழங்கினார்!

ஞாயிறு, 30 ஜனவரி 2022 (15:00 IST)
மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக கூறப்படும் லாவண்யாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்துள்ளார்
 
தற்கொலை செய்துகொண்ட அரியலூர் பள்ளி மாணவி லாவண்யா குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் இன்று 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது
 
திருமானூர் அருகே மாணவி வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த நிதி உதவி வழங்கினார் 
 
அவருடன் வானதி ஸ்ரீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவி புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்