துபாயில் மினி செவ்வாய் கிரகம்...

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (12:19 IST)
துபாயில் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் ஒரு மாதிரி உலகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது துபாயின் மையப் பகுதியில் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது. 


 
 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக செவ்வாய் கிரகத்தை போன்ற மாதிரி உருவாக்கப்பட்டு அதில் மனிதர்களை குடியேற்ற முடிவு செய்துள்ளனர்.
 
இத்தகைய நடவடிக்கையில் தற்போது ஐக்கிய அமீரக நாடுகள் இறங்கியுள்ளது. இந்த பணி தற்போது துபாயில் துவங்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது. ரூ.879 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு செவ்வாய் கிரக அறிவியல் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது. 
 
இன்னும் 100 ஆண்டுகளில் அதாவது 2117 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்