செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்க நாசா முடிவு

திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:58 IST)
செவ்வாய் கிரகத்தில் பாக்டீரியாவை அனுப்பி ஆக்சிஜன் உருவாக்க  நாசா முடிவு செய்துள்ளது.


 

 
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலம் மூலம் நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் செவ்வாய் கிரகத்தில் கதிர் வீச்சின் தாக்கத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தனர். உயிரினங்கள் உயிர்வாழ ஆக்சிஜன் முக்கியமானது. செவ்வாய் கிரகத்தில் 0.13% மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. 
 
இதனால் செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் நாசா புதிய விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. அதில் பாசி அல்லது பாக்டீரியா அனுப்பப்படுகின்றன. அங்கு இந்த பாசி அல்லது பாக்டீரியா ஆக்சிஜனை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்