பூமியை நோக்கி வரும் விண்கல்- விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 4 நவம்பர் 2022 (21:54 IST)
பூமியை  நோக்கி 29 ஆயிரம் கிமீ வேகத்தில் பெரிய விண்கல்  ஒன்று வந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க  நாட்டைச் சேர்ந்தை நாசா விண்வெளி ஆய்வுமையம்  விண்வெளியில்  ரஷ்யா, ஜப்பான், சீனா,  பிரான்ஸ், உள்ளிட்ட  நாடுகளுடன் இணைந்து, விண்வெளியில் ஆய்வுமையத்தை நிறுவி ஆராய்ச்சசிகள் செய்து வருகிறது.

இந்த நிலையில், பல நாடுகளையும் விட அமெரிக்காவின்  நாசா விண்வெளியில் தனி கவனம் செலுத்தி பல அரிய தகவல்களைக் கண்டுபிடித்துக் கூறி வருகிறது.

இந்த நிலையில், பூமியை நோக்கி 29 ஆயிரம் கிமீ வேகத்தில் பெரிய விண்கல் வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விண்கள் பூமியின் மீது மோதாமல் இருக்க வேண்டி, அதைத் திசை திருப்பும் முயற்சியில்  நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்