உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸப்..! எப்போ சரியாகும்? – மெட்டா நிறுவனம் விளக்கம்!

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (13:42 IST)
உலகம் முழுவதும் கடந்த சில மணி நேரமாக வாட்ஸப் முடங்கியுள்ள நிலையில் இதுகுறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன் வளர்ச்சியால் மக்களிடையே செயலிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதில் அனைத்து விதமான தொடர்புகளுக்கும் மக்கள் முக்கியமாக பயன்படுத்தும் செயலியாக வாட்ஸப் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப வாட்ஸப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

ALSO READ: நான்கு நாட்களுக்கு மிதமான மழை, 29ஆம் தேதி கன மழை: வானிலை அறிவிப்பு

இந்நிலையில் கடந்த சில மணி நேரமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் வாட்ஸப் முடங்கியுள்ளது. வாட்ஸப்பில் உள்ள பல்வேறு சேவைகளை பயனாளர்கள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. சிலர் அனுப்பும் குறுந்தகவல்கள் மற்றவர்களை சென்றடையாமல் இருப்பது பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.

வாட்ஸப்பில் ஏற்பட்டுள்ள இந்த கோளாறால் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் எனவும், மீண்டும் வாட்ஸப் பழையபடி வேலை செய்யும் என்றும் கூறியுள்ள மெட்டா நிறுவனம், பயனாளர்களின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

Edited By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்