வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு நீதிபதிகள் கண்டனம்!

சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:39 IST)
வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் புதிய தனியுரிமைக் கொள்கைகள் குறித்து நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பயன்பாட்டில் இருந்து வருவது வாட்ஸ்ஆப். இந்த ஆப்பின் மூலம் தற்போது பணம் கூட அனுப்பும் நடைமுறை இருந்து வருகிறது.

ஆனால், இந்தியவில் வாட்ஸ் ஆபின் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்களை ஏற்க வைக்க வேண்டுமென  நோக்கத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையி,  தனது கொள்கைகளுக்கு பயனர்களிடம் இருந்து ஒப்புதல் பெற தந்திரமாக வாட்ஸ் ஆப் செயல்படுவதாகவும், புதிய கொள்கையை ஏற்கும்படி, பயனர்களுக்கு தொடர்ந்து தகவல் அனுப்பி வருவதாகவும். இந்து இந்திய  போட்டி நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளதாக நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்