வாட்ஸ்-அப்பில் புதிய வசதி.. நோட்டிபிகேஷன் மூலமே பிளாக் செய்ய முடியும்..!

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (09:05 IST)
சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதியை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நமக்கு வரும் மெசேஜை ஓப்பன் செய்யாமல் நோட்டிபிகேஷன் மூலம் அது நமக்கு தேவை இல்லை என்றால் பிளாக் செய்ய முடியும் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்-அப் பயனர்களுக்கு ஏராளமான தேவையில்லாத மெசேஜ்கள் வருகிறது என்றும் குறிப்பாக விளம்பர மெசேஜ்கள் பெரும் தொல்லையாக இருக்கிறது என்றும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை நமக்கு வரும் மெசேஜை ஓப்பன் செய்து படித்து விட்டு அதன் பிறகு தான் அதை பிளாக் செய்ய முடியும் நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த மெசேஜை ஓப்பன் செய்யாமல் நோட்டிபிகேஷன் மூலம் பிளாக் செய்யும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய வசதிக்கு பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்