திருநங்கையை பெண் என நம்பி பேஸ்புக்கில் காதலித்த இளைஞர்: பின்னர் நடந்த விபரீதம்!

புதன், 26 ஜூலை 2017 (13:38 IST)
சமூக வலைதளங்கள் மூலம் தற்போது பல காதல் ஜோடிகள் உருவாகிறார்கள். இதில் ஏமாறுபவரே அதிகம். அது கடைசியில் விபரீதமான முடிவில் சென்றுவிடுகிறது. முன் பின் தெரியாத ஒருவருடன் பழகி தவறான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.


 
 
இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. வன்யா ஹிகெர்சன் என்ற இளைஞர் இணையத்தில் டீ விஹாம் என்ற நர்சாக பணி புரியும் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை. அவர் தான் திருநங்கை என்பதை அந்த இளைஞரிடம் கூறவில்லை. அந்த இளைஞரும் இது தெரியாமல் அவருடன் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார்.
 
நாளடைவில் இவர்களது நெருக்கம் அதிகமாகி இருவரும் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே உடல் ரீதியான தொடர்பு முடிந்த பின்னர் அந்த திருநங்கை தான் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்பதை தெரிவித்துள்ளார்.
 
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் அருகில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து சரமாரியாக அந்த திருநங்கை மீது 119 முறை குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை கைது செய்தனர். பின்னர் அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

வெப்துனியாவைப் படிக்கவும்