லண்டனில் ஓட்டல் அறை வாடகை திடீர் உயர்வு: காரணம் இதுதான்!

செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (18:47 IST)
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் ஹோட்டல் அறையின் வாடகை திடீரென 40 சதவீதம் வரை உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இங்கிலாந்து ராணி எலிசபெத் சமீபத்தில் காலமான நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இங்கிலாந்து நாட்டிலிருந்து மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து பொதுமக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கி வரும் நிலையில் ஓட்டல் அறைக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்து உள்ளது. இதனை கணக்கில்கொண்டு லாட்ஜ் உரிமையாளர்கள் 40% வரை வாடகையை அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு நாடுகளிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதால் தான் இந்த வாடகை ஏற்றம் என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்