நேரலையில் ஒளிபரப்பப்பட்ட பிரசவம்!!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (10:49 IST)
அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி ஒன்றின் பிரசவம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.


 
 
நியூயார்க்கின் மேற்குப் பகுதியின் ஹார்ப்பர்ஸ்வில்லில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த விலங்கியல் பூங்காவில் "ஏப்ரல்" என்ற ஒட்டகச்சிவிங்கி பராமரிக்கப்பட்டு வருகிறது. 
 
ஏப்ரல் என பெயரிடப்பட்டுள்ள ஓட்டகச்சிவிங்கி கர்பம்தரித்த காலத்திலிருந்து அதன் இருப்பிடத்தில் கேமிராக்கள் பொருத்தப்பட்டன.
 
இந்நிலையில் ஏப்ரல் ஆண் குட்டி ஒன்றை ஈன்றெடுத்தது. ஏப்ரலின் பிரசவத்தை விலங்கியல் பூங்கா நேரலையில் ஒளிபரப்பு செய்தது. இந்த வீடியோ 10 லட்சதிற்கு அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்