உகாண்டா நாட்டில் நிலச்சரிவு -30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சனி, 13 அக்டோபர் 2018 (10:20 IST)
உகாண்டாவில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக் உயர்வு

உகாண்டாவில் கடந்த சில நாட்களாக கனமழைப் பெய்து வருகிறது. இதையடுத்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் உகாண்டாவின் புக்காலஸி நகரத்தில் கடுமையான் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து மண்ணுக்குள் புதைந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 34 பேர் வரை இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து மீட்புக்குழு நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு மீட்புப் பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை உறவினர்கள் மூலமாக சேகரித்து வருவதாகவும் அதன்பிறகே மொத்தமாக காணாமல் போனவர்கள் பற்றிய முழு விவரம் தெரிய வருமென்று மீட்புக் குழிவினர் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளை அகற்றும் பணிகளில் செஞ்சிலுவை சங்கத்தினரும் சேர்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்