தாய்லாந்தில் கோத்தபய ராஜபக்சே: தற்காலிக அடைக்கலம் என தகவல்!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (18:14 IST)
இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபயா ராஜபக்சே தற்போது தாய்லாந்து நாட்டில் தற்காலிகமாக அடைக்கலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக அதிபர் ராஜபக்சே இலங்கையில் இருந்து சிங்கபூருக்கு தப்பிச் சென்றார்
 
அங்கு அவர் சில நாட்களாக இருந்த நிலையில் தாய்லாந்து நாட்டிற்கு செல்லப் போவதாக கூறப்பட்டது. இதனை தாய்லாந்து நாடு முதலில் மறுத்தாலும் தற்காலிகமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் கொடுத்து இருப்பதாகவும் விரைவில் அவர் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி விடுவார் என்றும் கூறியுள்ளனர் 
 
சொந்த நாட்டிலிருந்து பயந்து ஓடி நாடு நாடாக சுற்றிக்கொண்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ச நிலைமை பரிதாபமாக உள்ளதாக இலங்கை மக்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்