தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் கைது: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:20 IST)
தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த பல ஆண்டுகளாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்ததாக கூறப்படுகிறது 
 
கைதான மீனவர்கள் நாகை மாவட்டம் அக்கரைபட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது 
 
தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தகவல் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்