தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கொசவா. இந்த நாடு செர்பியா நாட்டிடம் அடிமையாக பல ஆண்டுகாலம் இருந்த நிலையில், இந்நாடு சுதந்திரம் பெற அமெரிக்கா உதவி செய்தது. அதற்கு நன்றி கூறும் வகையில் இந்நாட்டில் பிறந்த பல குழந்தைகளுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர்களான புஷ், கிளிண்டன் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதே நன்றிக்கடனுக்காக அந்நாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்து வரும் ஓநாய்க்கு டிரம்ப் பெயரை வைத்துள்ளார். தான் வளர்த்து வரும் இந்த ஓநாய், டிரம்ப் போலவே சுறுசுறுப்பாக இருக்கின்றது என்பதால் அந்த பெயர் வைத்ததாக அவர் கூறியுள்ளார்.