மோடியின் ஆங்கிலத்தை கேலி செய்த டிரம்ப்; அமெரிக்க நாளிதழ் தகவல்

செவ்வாய், 23 ஜனவரி 2018 (12:42 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும் ஆங்கிலத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிமிக்ரி மூலம் கேலி செய்ததாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் மோடி கூறிய வார்த்தைகளை இந்தியா ஆங்கிலம் பேசும் முறையில் டிரம்ப் பேசியுள்ளார். ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்