நான் செத்துட்டேன்னு எவண்டா சொன்னது? – திடீர் எண்ட்ரி கொடுத்த கிம் ஜாங் உன்!

புதன், 26 ஆகஸ்ட் 2020 (14:12 IST)
வடகொரிய அதிபர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் கிம் ஜாங் உன் திடீர் எண்ட்ரி கொடுத்திருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில மாதங்கள் முன்பு மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் , அதனால் பொறுப்பை தனது சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து பல நாட்களாக கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. தென் கொரிய அதிகாரிகள் சிலர் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், விரைவில் அதிபர் பொறுப்பை அவரது சகோதரி ஏற்க உள்ளதாகவும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அனைவரின் ஊகத்தையும் பொய்யாக்கி திடீரென அரசாங்க கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சி கவுன்சிலில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன்னின் புகைப்படங்களை வட கொரிய நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து கிம் ஜாங் உன் ஆதரவாளர்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அரசாங்க நிகழ்வுகளை அவ்வாறாக முன்னதாக எடுத்து வைக்க வாய்ப்பில்லை என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்