இந்திய வம்சாவளியினர்களுக்கு முக்கிய பதவி: அமெரிக்க அதிபர் ஜோபைடன் முடிவு!

புதன், 24 ஆகஸ்ட் 2022 (13:33 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினர்களுக்கு முக்கிய பதவிகளை அள்ளித்தந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதுவரை 130க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தனது நிர்வாகத்தின் முக்கிய பணியில் நியமித்துள்ள ஜோ பைடன் மேலும் சில இந்திய வம்சாவளியினர்களை நியமனம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது
 
இதற்கு முன்னர் ஜனாதிபதியாக டிரம்ப் நிர்வாகத்தில் 80 இந்திய வம்சாவளியினர்களும், முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தில் 60க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் பணிபுரிந்த நிலையில் தற்போது இரண்டு மடங்கு இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் முக்கிய பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நான்குபேர் மற்றும் முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் 20 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவர்களே இந்திய வம்சாவளிப் பெண் என்பது தெரிந்ததே.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்