பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

Siva

வெள்ளி, 23 மே 2025 (09:09 IST)
ஜப்பானை சேர்ந்த 54 வயதான முன்னாள் டாக்சி டிரைவர் சதோஷி தனாகா, ஒரு பெண் பயணியை தூக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இதே மாதிரியான சம்பவங்களை அவர் பலமுறை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரிடம் இருந்து சுமார் 3,000 வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 50 பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.
 
ஒரு வருடத்துக்கு முன், தனது டாக்சியில் பயணித்த 20-வயது பெண்ணுக்கு தூக்க மருந்து கொடுத்து, வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
டோக்கியோ காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: "தனாகா, அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் மயக்கத்தில் இருந்தபோது பாலியல் தாக்குதல் நடத்தினார். இது தொடர்பான காணொளிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த பெண்ணின் தலைமுடியில் தூக்குமருந்து தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
மேலும், 2008 முதல் பல பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்த காணொளிகள் அவரது செல்போன் மற்றும் பிற சாதனங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்