உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

Siva
செவ்வாய், 7 மே 2024 (14:20 IST)
உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சாதனம் 5ஜி சாதனத்தை விட 20 மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இந்தியா உள்பட பல நாடுகளில் தற்போது 5ஜி வசதி உள்ளது என்பதும் இதன் மூலம் மிக விரைவாக டவுன்லோடு அப்லோடு செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஜப்பானில் 6ஜி சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சாதனம் 5ஜி வேகத்தை விட 20 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்குவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகின் முதல் 6ஜி சாதனத்தை ஜப்பானில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கட்டமைத்து உள்ளதாகவும் ப்ரோட்டாடைப் என்று கூறப்படும் இந்த 6ஜி மாதிரி வடிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஒரு வினாடிக்கு 100  ஜிகாபிட் வேகத்தில் இந்த சாதனம் இயங்கும் என்றும் கூறப்படுவதால் இது நடைமுறைக்கு வந்தால் இன்டர்நெட்டில் வேற லெவலில் புரட்சி ஏற்படும் என்று கருதப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்