ஜம்மு காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டது என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அமாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என்றும் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆக கிரிஷ் சந்திரா மர்மு என்பவர் அக்டோபர் 30-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்
இந்த நிலையில் துணை நிலை ஆளுனராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டு ஒன்பது மாத காலமே ஆகியுள்ள நிலையில் திடீரென நேற்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். ராஜினா செய்ததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை
இதனை அடுத்து அவர் மத்திய மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் சிஏஜி அமைப்பின் தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவிக்கு நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது