இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் !
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (22:07 IST)
இந்திய ராணுவத்தில் 162 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த் ஷாகிர் மன்சூர் என்பவர் ஈகைத் திருநாள் கொண்டாட தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றவர் திரும்ப அவரைக் காணவில்லை.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் இருந்து நேற்றுக் காணாமல் போன இந்திய ராணுவ வீரர் ஷாகிர் மன்சூரை தீவிரவாதிகள் கடத்திருக்கலாம் என ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
மன்சூரின் கார் ஓரிடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், அவரைத் தேடும் முயற்சிகள் பல புறங்களில் இருந்தாலும்கூட அவர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிப்படுகிறது.