டிரம்பின் முக்கிய கொள்கையை மீறிய மகள் இவாங்கோ

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (05:05 IST)
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிற நாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது, அமெரிக்கர்கள் அமெரிக்க பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பது டிரம்பின் முக்கிய கொள்கைகள் ஆகும். ஆனால் அவருடைய இந்த கொள்கையை அவரது மகளே மீறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.




 


டிரம்பின் மகள்  இவங்கா டிரம்ப் சமீபத்தில்  சீனாவில் இருந்து 53 டன் அளவிலான சீனத் தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இந்த செயல் அவரது தந்தையின் கொள்கைக்கு எதிரானது என்று பலர் விமர்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கொள்கையும் கோட்பாடும் மக்களுக்கு மட்டும்தானா? குடும்பத்தினர்களுக்கு கிடையாதா? என்று அமெரிக்கர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிரம்ப் மகள் இவாங்கா அமெரிக்காவில் நடத்தவுள்ள ஃபேஷன் ஷோ ஒன்றுக்காக இந்த பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகவும், தலைவர்கள் முதலில் தங்களுடைய கொள்கைகளை தனது குடும்பத்தில் இருந்து செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்