ஸ்வீடன் நாட்டில் பாலியல் உறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல் பலரையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து ஸ்வீடனில் உடலுறவுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளதாகவும் 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியது.
ஸ்வீடனில் பாலியல் உறவு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் போலியானவை என அந்நாட்டு விளையாட்டுத் துறை அறிவித்துள்ளது. ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு என்றும் எதுவும் இல்லை, அதில் உறுப்பினர்கள் என்றும் யாரும் இல்லை என ஸ்வீடன் விளையாட்டு துறை விளக்கமளித்துள்ளது.