ப்ளான் போட்டு கொடுத்த காவலர்கள்: எஸ்கேப் ஆன கைதிகள் – ஈரானில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (08:48 IST)
ஈரானில் சிறை கைதிகள் தப்பி செல்ல காவலர்களே திட்டம் போட்டு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 74 கைதிகள் காவலர்களை தாக்கி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவத்தில் தப்பியோடி தலைமறைவான கைதிகளை தேடும் பணியை முடுக்கி விட்டத்தில் 20 கைதிகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. தலைமறைவாகிவிட்ட 54 கைதிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள காவலர்களிடம் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நான்கு காவலர்கள் கைதிகள் தப்பி செல்ல உதவியதாக தெரிய வந்துள்ளது. திட்டமிட்டு கைதிகளுக்குள் பூசலை ஏர்படுத்தி சிலரை தப்ப வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்காக நான்கு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்களே கைதிகளை தப்பிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்