இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! – 6 பேர் பலி!

ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (09:32 IST)
மத்திய இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் கடற்கரையருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் மலாக் நகருக்கு தென்மேற்கே 45 கி.மீ தொலைவுக்கு அப்பால் மையம் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்