தனுஷ் பட இயக்குநரை முத்தமிட்டு வாழ்த்திய விஜய்சேதுபதி!

சனி, 10 ஏப்ரல் 2021 (23:29 IST)
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன் திரைப்படம் நேற்று ரிலீசான நிலையில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ள நிலையில் விஜய்சேதுபதி இப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

இப்படம்நேற்று வெளியான நிலையில்  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதிபதி இப்படத்தைப் பார்த்துவிட்டு, கர்ணன் படத்தை யாரும் தவறவிட வேண்டாம்.அற்புதமான படம் என்று பாராட்டியதுட்ன், பிவிஆர் தியேட்டரில் இப்படத்தைப் பார்த்து முடித்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு தனது வாழ்த்துகள் தெரிவித்தார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்