எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ; வெளியேற்றப்பட்ட கிராமம்! – இந்தோனேஷியாவில் பரபரப்பு!
செவ்வாய், 30 மார்ச் 2021 (10:39 IST)
இந்தோனேசியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விண்ணை முட்டும் அளவு தீ பிழம்பு எழுந்த நிலையில், அதன் உஷ்ணம் அருகிலுள்ள கிராமங்கள் வரை உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தீ அதிகரித்து வருவதால் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தீ விபத்தால் ஆலை ஊழியர்கள் 9 பேர் படுகாயமுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.