துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காகவும், மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகவும் இந்திய மீட்பு குழு சிரியா மற்றும் துருக்கி சென்றுள்ளது.
6 விமானத்தில் துருக்கி சென்றுள்ள 100 இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குழு இண்ட் 11 துருக்கியின் காசியந்தெப் பகுதியில் உள்ள நுர்தாகியில் நடத்திய மீட்பு பணியில் இடிந்து விழுந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 6 வயது சிறுமியை உயிருடன் காப்பாற்றியுள்ளனர். பூகம்பம் ஏற்பட்டு 4 நாட்களான நிலையில் சிறுமியை இந்திய மீட்பு படை உயிருடன் மீட்டுள்ளது. இந்திய மீட்பு படைக்கு துருக்கி மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.