எவரெஸ்டில் 10 முறை ..ஆபத்தான சிகரத்தில் ஏறிய வீரர் உயிரிழப்பு

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (22:04 IST)
உலகில் மிக உயரமான சிகரான எவரெஸ்டில் 10 முறை ஏறிய வீரர்  நோயல்  ஹன்னா மரணமடைந்தார்.

உலகின் மிக உயரமான சிகரம்  எவரெஸ்ட் சிகரமாகும். இந்த  எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை லட்சியமாகவே பல நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் கொண்டிருப்பர்.

இந்த  நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் 10 முறை ஏறி சாதனைபடைத்தவர்  நோயல் ஹன்னா. இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரராவார். நேபாளத்தில் உள்ள அன்னபூர்னா என்ற மலைச்சிகரத்தில்  ( 10 வது பெரிய சிகரம்- 8091 மீட்டர் உயரம்) நேற்று ஏறினார்.

சிகரத்தில் இருந்து கீழிறங்கியபோது திடீரென்று உயிரிழந்தார்.  அவர் எப்படி உயிரிழந்தார் என்ற காரணம் தெரியவில்லை.

இமமலையில் பயணம் மேற்கொள்வது மிகவும் அபாயகரமானதாக கூறப்படும் நிலையில், நோயலின் மரணம் மலையேற்ற வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்