இந்தியா-அமெரிக்கா இடையிலான விமானங்கள் ரத்து: 5ஜி சேவை காரணமா?

வியாழன், 20 ஜனவரி 2022 (10:32 IST)
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இயங்கிவரும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் தற்போது 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலைக்கற்றையால் விமான போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து ஏர்-இந்தியா, எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே கவலை தெரிவித்த நிலையில் இந்தியா அமெரிக்கா இடையே செல்லும் 14 விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
இந்தியா அமெரிக்கா இடையே நேற்று இயக்கப்பட இருந்த எட்டு விமானங்களையும் இன்று இயக்கப்பட ஆறு விமானங்களை ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 5ஜி சேவையால் சிக்னல்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்