மாஸ்க் போடலனா வெளியே அனுப்புங்க... தனியாருக்கு அரசு அட்வைஸ்!

புதன், 19 ஜனவரி 2022 (09:45 IST)
அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

 
உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகிலிருந்து முழுமையாக ஒழிய வாய்ப்பில்லை என்றும் எனவே தரமான முகக்கவசம் அணிதல் மூலம் கொரோனாவுடன் வாழ நாம் அனைவரும் பழகி கொள்ள வேண்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
எனவே அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. அலுவலகங்களில் பணிபுரியும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். 
2. பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். 
3. கொரோனா தொற்று அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 
4. 300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்