மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு

புதன், 9 ஜனவரி 2019 (12:03 IST)
மெக்சிகோவில் கேளிக்கை விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. 
மெக்சிகோ நாட்டின், குவாண்டினோ மாகானத்தில் கடற்கரை நகரமான பிளயா டெல் கார்மனில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முந்தினம் இரவு 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கு  சரமாரியாக சுட்டனர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு அருகிலிருந்த  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை  நடந்து வருகிறது.
 
துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார் என்பது குறித்தும், அதற்கான காரணம் இது வரையில் தெரியாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்