ஹெலிகாப்டர் விபத்தில் மெக்சிகோவின் பெண் கவர்னர் பலி

செவ்வாய், 25 டிசம்பர் 2018 (15:10 IST)
மெக்சிகோவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மெக்சிகோவின் பியூப்லா மாநில பெண் கவர்னர் மார்த்தா எரிக்கா உயிரிழந்தார்.
மெக்சிகோ நாட்டின் பியூப்லா மாநில கவர்னராக கடந்த 14-ஆம் தேதி மார்த்தா எரிக்கா அலோன்சோ பதவி ஏற்றார். இவர் பழமைவாத தேசிய செயல் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வந்தார்.
 
இந்நிலையில் மார்த்தா தனது கணவர் ரபேல் (முன்னாள் கவர்னர்) மொரினோவுடன் இணைந்து நேற்று ஹெலிகாப்டரில் பயண  மேற்கொண்டார். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரின் தலைப்பகுதி  நொறுங்கியதால் மார்த்தா மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மார்த்தா மற்றும் அவரது கணவர் மறைவிற்கு மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ்  மானுவேல் லோபஸ் இரங்கல் தெரிவித்துள்ளர்.
 
பியூப்லா மாநிலத்தின் கவர்னராக பதவி ஏற்ற பத்தே நாட்களில் மார்த்தா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்