கணக்கு டீச்சரை கடத்திட்டு போன மர்ம நபர்கள்: கும்பகோணத்தில் பரபரப்பு

சனி, 1 டிசம்பர் 2018 (12:49 IST)
கும்பகோணத்தில் கணக்கு டீச்சரை மர்ம அந்பர்கள் கடத்திக் கொண்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருபவர் காயத்ரி. இவர் கணக்கு டீச்சர் ஆவார்.
 
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின்னர் இருசக்கர வானத்தில் வீட்டிற்கு சென்ற காயத்ரியை காரில் வழிமறித்த கும்பல் அவரை கடத்திச் சென்றனர்.
 
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் காயத்ரியை கடத்திச் சென்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்