கடந்த சில காலமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக ஐடி ஊழியர்கள் பலரை ஐடி நிறுவனங்கள் கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து வருவது உலக அளவில ஐடி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நிறுவனங்களான கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட், விப்ரோ, ஸ்பாட்டிபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அந்த வகையில் தற்போது பிரபலமான ஐபிஎம் நிறுவனமும் சுமார் 3900 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்தனைக்கும் ஐபிஎம் ஆண்டு வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்துதான் உள்ளது. எனினும் நிச்சயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை என்பதால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.