கிரகங்கள் எப்படி உருவானது? நாசா ஆய்வு

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (15:04 IST)
கிரகங்கள் உருவானது எப்படி என்பதை கண்டறிய நாசா ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது


 

 
விண்வெளியில் உள்ள பல அதிசய நிகழ்வுகளை நாசா ஆராய்ச்சி செய்து வெளியிட்டு வருகிறது. அண்மையில் பூமியை போன்று வாழ தகுதியுள்ள பல கிரகங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.
 
பால் அண்டத்தில் பல சூரிய குடும்பங்கள் உள்ளதாகவும் கூறிவருகின்றன. அதேபோல் நமது சூரிய குடும்பத்தில் ஏராளமான கிரகங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது கிரகங்கள் எப்படி உருவானது என்று கண்டறிய நாசா விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சூரியனை சுற்றி ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் பென்னு என்ற குறுங்கோளின் மண் மாதிரியை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக ஓசிரிஸ்-ரெஸ் என்ற செயற்கைகோளை வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளனர். இந்த செயற்கைகோள் 2018ஆம் ஆண்டு பென்னு என்ற குறுங்கோளை சென்றடையும்.
 
60 முதல் 2 ஆயிரம் கிராம் எடையுள்ள மண் மாதிரிகளை வருகிற 2023-ம் ஆண்டு எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்