அவர்களை புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டதாகவும் அவர்களை புகைப்படம் எடுக்கத் துரத்தியதாகவும், இதனால், இளவரசார் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
புகைப்படக்கலைஞர்கள் ஹாரி மற்றும் மேகன் தம்பதியை சுமார் 2 மணி நேரம் காரில் துரத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 1997 ஆம் ஆண்டு ஹாரியின் தாயார் டயானாவை புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுக்க காரை துரத்தியபோது, அவர் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது,