பெண்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது: ஆப்கன் தாலிபான் அரசு உத்தரவு

வியாழன், 5 மே 2022 (16:02 IST)
பெண்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது: ஆப்கன் தாலிபான் அரசு உத்தரவு
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லை என தாலிபான் அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே பெண்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கபப்ட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை பார்க்கக் கூடாது என்றும் ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு சென்று படிக்கக்கூடாது என்றும் கூறிவருகின்றனர் 
 
இதற்கு உலக அளவில் பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன இந்த நிலையில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்க கூடாது என்றும் பெண்கள் வாகனங்களை வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது என்றும் ஆப்கானிஸ்தான் அரசு உள்ளது 
 
 பெண்கள் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்யலாம் என்றும் ஆனால் வாகனங்களை ஓட்டக் கூடாது என்றும் தாலிபான் அரசு கூறியுள்ளதாக கூறப்படுகிறது இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்