ட்ரம்ப்பை முட்டாளாக்கிய கூகுள் – வைரல் ஆகும் இணையதளத் தேடல்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (11:55 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கூகுள் இணையதளம் அவமதித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கூகுளில் கிடைக்காத விஷயங்களே இல்லை எனும் அளவிற்கு இணைய உலகின் களஞ்சியமாக விளங்குகிறது. உலகின் நம்பர் 1  தேடல் இயந்திரமாக உள்ள கூகுள் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த சர்ச்சை என்னவென்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அவமதித்துவிட்டதாகக் கூறப்படும் புகார்கள்தான்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிரடி நடவ்டிக்கைகள் என்றால் அதில் சில முட்டாள்தனமான நடவடிக்கைகளும் அடக்கம், வெளிநாட்டவருக்கு விசா மறுப்பது, எதிரி நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பது, அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்றவை சில உதாரணங்கள். அதனால் அமெரிக்காவிலும் மற்ற உலக நாடுகளிலும் கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

ஆனால் தற்போது வந்துள்ளதோ சர்ச்சையோ வேறுவடிவிலானது. கூகுளில் இடியட் (முட்டாள்) என டைப் செய்தால் ட்ரம்ப்பின் படங்களும் ட்ரம்ப் பற்றிய செய்திகளும் வரிசையாக வந்து விழுகின்றன. இதனால் அமெரிக்காவில் உள்ள ட்ரம்ப் ஆதரவாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.

இதுசம்மந்தமாக சமீபத்தில் கூகுளின் வெளிப்படைத்தன்மை மற்றும் தேடல் முறை பற்றிய கலந்தாய்வில் கலந்துகொண்ட சீ.ஈ.ஓ. சுந்தர் பிச்சையிடம் கேட்ட போது, அவர் ’இது அரசியல் சார்பற்றது. எங்கள் இஞ்சினில் தேடல் முறைக்கான 200 க்கும் மேற்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றிதான் எங்கள் இஞ்சின் செயல்படுகிறது’ என விளக்கமளித்தார்.

ஆனாலும் அதன் பின்னரும் இடியட்டில் ட்ரம்ப்தான் வந்து விழிந்துகொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்