போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

Siva

திங்கள், 28 ஜூலை 2025 (11:34 IST)
கூகுள் ஃபோட்டோஸ் செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய இலவச அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன் பயனர்களுக்குக் கிடைக்கிறது.
 
 
கேலரியில் உள்ள படங்களை AI உதவியுடன் சில நொடிகளில் சிறிய வீடியோ கிளிப்களாக மாற்றலாம். இது முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கிறது.
 
மேலும் உங்களுக்கு பிடித்த படங்களை அனிமேஷன், ஸ்கெட்ச் அல்லது 3D அனிமேஷன்களாக மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் AI கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள்/வீடியோக்களில், அவை AI-ஆல் உருவாக்கப்பட்டவை என்பதைக்குறிக்கும் வகையில் வாட்டர்மார்க் இருக்கும்.
 
இந்த அம்சங்கள் தற்போது அமெரிக்காவில் உள்ள கூகுள் ஃபோட்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது. அடுத்த சில வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்