ராகுல் காந்தி, கால் சென்டர்கள் மற்றும் மென்பொருட்கள் மூலம் வாக்கு திருட்டு நடப்பதாகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, "ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் பொய்யான கதைகளை சொல்லி வருகிறது. ராகுல் காந்தி வேலையின்மை, கல்வி அல்லது சாலை வசதிக்காக யாத்திரை செல்லவில்லை. வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதே அவரது நோக்கம். அவர்களுக்கு எப்படி வாக்களிக்கும் உரிமை வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "மத்திய அரசு நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டு ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இந்தியாவில் ஒரு தவறான அரசு அமைந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்கள் அதிகமாகிவிடுவார்கள்" என்றும் அமித்ஷா எச்சரிக்கை விடுத்தார்.