விளைவுகளை கணிக்க முடியாத ஆண்டு 2017!!

வியாழன், 23 மார்ச் 2017 (16:02 IST)
கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. 


 
 
கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கிமீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது. 
 
மேலும், 2017-ல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள்  புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது. 
 
இது பற்றிய ஆய்வை கூட செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளோம், விளைவுகளை கணிக்க முடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என வெப்ப நிலை குறித்து உலக வானிலை எச்சரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்